×

இரண்டாம் சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மலர்களாலான ‘செல்பி ஸ்பாட்’

ஊட்டி, செப்.20:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்கும் வகையில் மலர் தொட்டிகளை கொண்டு ரங்கோலி மற்றும் செல்பி ஸ்பாட் போன்ற மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஊட்டியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் கடை பிடிக்கப்படுகிறது. இவ்விரு மாதங்களும் பல்வேறு மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம். அதேபோல், 10 ஆயிரம் தொட்டிகளில் மலர் ெசடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம். தற்போது பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூத்துவிட்டன. இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தொட்டிகளில் பூத்துள்ள மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெர்னஸ் பூங்காவில் 5 ஆயிரம் தொட்டிகளை ரங்கோலியும், செல்பி ஸ்பாட் ஆகியவை தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாடங்களில் 10 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். அடுத்த வாரம் பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறைக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை
கண்டு ரசிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Tags : botanical garden ,season ,
× RELATED உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!!