×

அழகரசன்நகர் குடியிருப்பு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தம்

ஈரோடு, செப். 20: ஈரோடு கருங்கல்பாளையம் அழகரசன்நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு 4 மாதத்திற்கு பிறகு நேற்று புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் அழகரசன்நகரில் 180 வீடுகள் கொண்ட 9 அடுக்கு மாடிகளும், 92 வீடுகள் கொண்ட தரைதளத்துடன் கூடிய 3 அடுக்குகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.99.09 கோடி மதிப்பீட்டில் கடந்த 2017ம்ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த குடியிருப்பு கட்டுமான பணிகளை இந்த ஆண்டு மே 9ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டது.

ஆனால், பணிகள் முடிக்கப்பட்டு 4 மாதம் ஆன நிலையில் இதுவரை வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தேவையான மின்சாரத்தை வழங்குவதற்காக புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்துள்ளனர். ஆனால், இணைப்பு வழங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்த விரிவான செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 14ம் தேதி படத்துடன்  வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து அருகில் உள்ள மின்கம்பத்திற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.

Tags : Transformer ,Alagarasanagar ,area ,
× RELATED சீர்காழி பிடாரி வடக்கு வீதியில்...