×

கோவை-ஷீரடிக்கு நேரடி விமான சேவை

தொண்டாமுத்தூர், செப்.20: கோவையில் இருந்து ஷீரடிக்கு நேரடி விமான சேவை துவங்க வேண்டும் என சாய் சேவா பரிவார் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை பாப்பநாயக்கன்புதூரில் சாய் சேவா பரிவார் அமைப்பின் துவக்க விழா நிறுவனத் தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் தர்மேந்திரா வரவேற்றார். விழாவில் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் அமைப்பை துவக்கி வைத்தார். பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் அமைப்பின் கொடியை அறிமுகம் செய்து வைத்தனர். விழாவில் விபூதி சித்தர், வக்கீல் ரங்கராஜூ, மாநில தலைவர்பரமசிவம், மாநில மகளிர் அணியின் கவிதா, பொருளாளர் சம்பத் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் பங்கேற்ற, சாய் சேவா பரிவார் அமைப்பின் பெண்கள் பிரிவின், மாநில பொது செயலாளர் டாக்டர் பிரீத்தி லட்சுமி பேசுகையில், ‘இந்த அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஷீரடி சாய்பாபா பக்தர்களை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.  வசதியற்ற, வயதானவர்களை இலவசமாக ஷீரடி தரிசனம் செய்ய அழைத்து செல்ல ஏற்பாடு செய்து தருகின்றோம். கோவையில் இருந்து ஷீரடிக்கு நேரடி விமான சேவை செய்து தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாய் சேவா பரிவார் அமைப்புடன் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆப் ஆக்ருதி இணைந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன’ என்றார்.

Tags : Flights ,Coimbatore ,
× RELATED வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்தது;...