×

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்.ஜி.என்.எக்ஸ் 2019 போட்டி

கோவை,செப்.20:டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் சார்பில் புதிய தொழில்நுட்ப படைப்புகளுக்கான என்.ஜி.என்.எக்ஸ் போட்டி கொல்கத்தாவில் உள்ள கீதாஞ்சலி பார்க்கில் நடந்தது. இதில் 400 கல்வி நிறுவனங்களை சேர்ந்த 1 லட்சதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். டிஜிட்டல் எமினென்ஸ் மேக்கிங் திங்ஸ் ஸ்மார்ட் என்ற தலைப்பில் வணிகங்களை மறுவடிவமைக்க உதவும் ஸ்மார்ட் தயாரிப்புகளை உருவாக்குவதையும், அன்றாட வாழ்வில் நேர்மறையான தாக்கங்களை உருவாக்கும் ஸ்மார்ட் தயாரிப்புகளை கண்டறிவதும் இலக்காக வைக்கப்பட்டது.
 
இதில் கோவை அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் முதலிடமும், கொல்கத்தா இன்ஸ்டிடியூட் ஆப் இஞ்சினியரிங் அண்டு மேனேஜ்மெண்ட் இரண்டாமிடமும், பெங்களூரு கே.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மூன்றாமிடமும் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.சி.எஸ் நிறுவனத்தின் ஐ.ஒ.டி பொறியியல் மற்றும் தொழில்துறை சேவைகள் நடைமுறை பிரிவின் உலக செயல்பாடுகள் தலைவர் ரெகு அய்யாசாமி வழங்கினார்.

Tags : Tata Consultancy Services ,
× RELATED 2019 அத்திவரதர் தரிசனம் வரவு செலவு...