×

திமுக விவசாய அணி துணைத்தலைவராக கிருஷ்ணகிரி மதியழகன் நியமனம்

கிருஷ்ணகிரி, செப்.20:  திமுக மாநில விவசாய அணி துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மதியழகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தொழிலதிபர் மதியழகன், திமுக மாநில விவசாய அணி துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

Tags : Krishnagiri ,Vice-President ,DMK Agriculture Team ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்