×

சூளகிரி பகுதியில் பீன்ஸ் விளைச்சல் அமோகம்

சூளகிரி, செப்.20: சூளகிரி பகுதியில் செண்டுமல்லி, பீன்ஸ் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை சரிவால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் பரவலாக காய்கறிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மலர் செடிகளையும் சாகுபடி செய்துள்ளனர். காய்கறிகளை பொறுத்தவரையில் ஆண்டு முழுவதும் பீன்ஸ் சாகுபடி பிரதானமாக உள்ளது. சூளகிரி பகுதியில் அறுவடை செய்யப்படும் பீன்ஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். மேலும், சென்னை மற்றும் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், பீன்ஸ் விலை ஏறுமுகத்திலேயே இருக்கும்.

இந்நிலையில், தொடர் மழையால் பீன்ஸ் மகசூல் அதிகரித்துள்ளது. மேலும், சூளகிரி பகுதியில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே விளைச்சலுக்கு வருவதால், வேறு வழியின்றி காய்களை பறித்து விற்பனைக்கு அனுப்பக் கூடிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதேவேளையில், முகூர்த்த தினங்க்ள இல்லாதததால் தேவை குறைந்துள்ளது. சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ள நிலையில், தேவை குறைந்துள்ளதால் பீன்ஸ் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ பீன்ஸ் ₹45 முதல் ₹60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ₹15 ஆக குறைந்துள்ளது.

இதேபோல், தொடர் மழையால் சூளகிரி பகுதியில் செண்டுமல்லி மகசூல் அதிகரித்துள்ளது. ஆனால், வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பூக்களின் தரம் குறைந்து வருகிறது. இதையடுத்து, பூக்களை பறித்து சந்தைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் ஆளாகியுள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பூக்களின் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ₹50 வரையிலும் விற்பனை செய்யப்பட்ட செண்டுமல்லி தற்போது 2 ரூபாயாக சரிந்துள்ளது. பீன்ஸ், செண்டுமல்லி விலை சரிவால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். ஆயுத பூஜையையொட்டி பீன்ஸ் மற்றும் ெசண்டுமல்லிக்கான தேவை அதிகரிக்கும்பட்சத்தில் விலை உயரும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.

நாளைய மின்நிறுத்தம்
கிருஷ்ணகிரி பகுதி:  கிருஷ்ணகிரி நகர், ராஜாஜி நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1 மற்றும் 2, மாவட்ட கலெக்டர் அலுவலகம், பழையபேட்டை, குந்தாரப்பள்ளி, பையனப்பள்ளி, கொண்டேப்பள்ளி, பில்லனக்குப்பம், சாமந்தமலை, தளவாய்பள்ளி, நெடுமருதி, கே.திப்பனப்பள்ளி, பி.கொத்தூர், வேப்பனஹள்ளி, மணவாரனப்பள்ளி, எம்.சி.பள்ளி, வரட்டனப்பள்ளி, எம்டிவி நகர், நாரலப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, மகாராஜகடை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆடவர் கலை கல்லூரி, கே.ஆர்.பி. டேம், திம்மாபுரம், மலையாண்டஅள்ளி, கூரம்பட்டி, ஆலப்பட்டி, சுலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கே.எம்.பட்டி, கூலியம் மற்றும் சுற்றுவட்டார பகுதி.

Tags : Sulagiri ,area ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...