×

மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கு இலவச மருத்துவ முகாம்

லால்குடி, செப்.20: திருச்சி மாவட்டம் லால்குடியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கு இலவச மருத்துவ முகாம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இதில் மாவட்ட கல்வி அலுவலர் அறிவழகன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ சிகிச்சை, தேசிய அடையாள அட்டை, மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள், இலவச பேருந்து பாஸ், மருத்துவ காப்பீட்டு அட்டை போன்றவை வழங்கப்பட்டது.

இதில் 136 மாணவர்கள், 84 மாணவிகள் என மொத்தம் 220 பயன்பெற்றனர்.நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் முத்துச்செல்வன், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துச்சாமி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர், வட்டார கல்வி அலுவலர் மார்ட்டீன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Free Medical Camp ,
× RELATED 128 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை