×

அந்தநல்லூர் வட்டாரத்தில் சம்பா ஒரு போக சாகுபடிக்கு விதைநெல், உயிர் உரங்கள் இருப்பு விவசாயிகள் பயன்பெறலாம்

திருவெறும்பூர், செப்.20: திருச்சி அருகே உள்ள அந்தநல்லூர் வட்டார விவசாயிகளுக்கு சம்பா ஒரு போக சாகுபடிக்கு தேவையான விதை நெல் மற்றும் உயிர் உரங்கள் மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளதாகவும் தேவைப்படும் விவசாயிகள் பெற்று பயன் பெறுமாறு அந்தநல்லூர் வேளாண் உதவி இயக்குநர் (பொ) கோமதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அந்தநல்லூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் திருவனைக் கோவிலில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்திலும் சம்பா உயர் விளைச்சல் நெல் ரகமான டிகே எம்13, 50 சத மானியத்திலும், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் நெல்நுண்ணூட்டம் இருப்பு உள்ளது. சம்பா நெல் இயந்திர நடவு மானியம் திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் பிற திட்டங்களான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்திலும் விவசாயிகள் சேர்ந்து பயன் பெறலாம்.

பிரதம மந்திரியின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர விருப்பமுள்ள 18 முதல் 40 வயதுள்ள விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை (பிறந்த தேதி, மாதம், வருடம் இருக்க வேண்டும்), வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அருகாமையில் உள்ள பொது சேவை மையத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத்திட்டம் மூலம் குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைத்தல், டீசல் பம்பு செட், மின் மோட்டார் பம்பு செட் நிறுவுதல், பாசனக்குழாய் மற்றும் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மேற்காண் திட்டங்களை பற்றி மேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட அந்தநல்லூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி வேளாண்மை அலுவலர்களான ரமேஷ்குமார், கோப்பு மற்றும் அந்தநல்லூர் (பொ) பகுதி-9789600820, சிவக்குமார், சிறுகமணி மற்றும் பேரூர்(பொறுப்பு) பகுதி-9500524632, கார்த்திக், திருவளர்சோலை மற்றும் திருவானைக்கோவில் (பொ) பகுதி-9976843001 ஆகியவர்களை தொடர்பு கொண்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் சனிக்கிழமைகளிலும் விதைநெல் விற்பனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.


Tags : Andanallur ,region ,
× RELATED பத்திர பதிவு அதிகாரிகள் மாற்றம்