×

ஊருக்கு நடுவே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு வெங்கனூர் கிராம இளைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

பெரம்பலூர்,செப்.20:பொது மக்கள் வசிக்கும் ஊருக்கு நடுவே செல்போன் டவர் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துவெங்கனூர் கிராம இளை ஞர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பெரம்பலூர் மாவட்டம், வே ப்பந்தட்டை தாலுக்கா, பெரி யம்மாபாளையம் ஊராட்சி க்கு உட்பட்டது வெங்கனூர் கிராமம். இவ்வூரைச் சேர் ந்த 30க்கும்மேற்பட்ட இளை ஞர்கள் பூசமுத்து மகன் மணிகண்டன் என்பவரது தலைமையில் நேற்று பெர ம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்குத் திரண் டு வந்து முற்றுகையிட்ட னர். பின்னர் அவர்கள் பெர ம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தாவிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்தி ருப்பதாவது : எங்களது வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தி னகுமார் என்பவர், சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் மக் கள் எதிர்ப்பைமீறி செல் போன் டவர் அமைக்க ஏற் பாடு செய்து வருகிறார். இதற்காக அவர் எவ்வித ஒப்புதலும் பெறவில்லை எனத் தெரிய வருகிறது.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று வெங்கனூர் கிராம பொது மக்கள் சார்பாக செல்போ ன் டவர் அமைக்கும் பணிக ளை நிறுத்தச்சொல்லி மாவட்டக் கலெக்டர், வரு வாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோரிடம் கோரிக் கை புகார் மனு அளித்து இருந்தோம். அந்தப் புகார் மனு தொடர்பாக இதுநாள் வரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அரும்பாவூர் காவல்துறையினர் உதவி யுடன் மீண்டும் வெங்கனூர் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரும்பாவூர் போலீசார் தங் களது பணிகளை இந்த விஷயத்தில் துஷ்பிரயோ கம் செய்து வருகின்றனர். எனவே வெங்கனூர் கிராம த்தில் பொதுமக்கள் வசிக் கும் பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதிக்க வேண்டாம் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
Tags : cell tower ,town ,
× RELATED அதிராம்பட்டினத்தில் புயல் நிவாரண மையம் அமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்