×

பளிங்காநத்தம் கிராமத்தில் பனை விதைகள் நடவு துவக்க விழா

அரியலூர்,செப்.20: அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரம் பளிங்காநத்தம் கிராமத்தில் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின்கிழ் பனை விதைகள் நடவு பணிகள் திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லதா துவக்கி வைத்தார். பளிங்காநத்தம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் தாய் அறக்கட்டளை தொண்டு நிறுவன தன்னார்வு தொண்டர்கள் மற்றும் விவசாய சங்க உறுப்பினர்கள் இணைந்து பளிங்காநத்தம் பெரிய ஏரி, குடிநீர் ஏரி, பெரிய ஓடை ஆகிய பகுதிகளில் பனை விதைகள் நடவு பணிகள் மேற்கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பனை மரத்தினால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மக்காச்சோள பயிரில் படைப்புழு கட்டுபாட்டு முறைகள் குறித்து திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லதா கூறினார். விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதியம் திட்டம் குறித்து துணை வேளாண்மை அலுவலர் பால்ஜான்சன் விளக்கி கூறினார்.ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் முருகன் செய்திருந்தார்.


Tags : Opening Ceremony of Planting Palm Seeds ,Palinganatham Village ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...