காங்கிரஸ் தலைவரை அவதூறாக பேசிய தமிழக அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டத்தில் நடந்தது

ஜெயங்கொண்டம், செப்.20: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை கண்ணியமற்ற முறையில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மனோகரன், நகர தலைவர் ஜாக்சன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் விஜய்ஆண்டனி, மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வட்டார காங்கிரஸ் தலைவர் செங்குட்டுவன் வரவேற்றார். முடிவில் வட்டார காங்கிரஸ் தலைவர் அறிவழகன் நன்றி கூறினார்.Tags : protest ,Jayankondam ,Tamil Nadu ,Congress ,
× RELATED சென்னையில் நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்து அதிரையில் சாலைமறியல்