×

ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

பாடாலூர்,செப் 20: ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் பாடாலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சோமு மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன்,மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினர்.திமுக இளைஞரணியின் மாநில செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமித்தற்கு தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும்,இளைஞரணி மாநில செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தும்,ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் 2000-க்கும் அதிகமான இளைஞரணி உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண் வரவேற்றார். முடிவில் பாடாலூர் ஊராட்சி செயலாளர் துரைசாமி நன்றி கூறினார்.

Tags : Alathur Western Union ,DMK Working Committee Meeting ,
× RELATED திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்