×

அரவக்குறிச்சி பகுதியில் நவீன செல்போன் செயலி மூலம் வாக்காளர் சரி பார்ப்பு பணி

அரவக்குறிச்சி, செப். 20: அரவக்குறிச்சி பகுதியில் வாக்காளர் சரி பார்ப்பு பணி நவீன மொபைல் செயலி மூலம் வீடு வீடாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது.புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்காக வீடு வீடாகச் சென்று நூறு சதவீதம் வாக்காளர் சரி பார்ப்பு பணி கடந்த 15ம் தேதி துவங்கியது. இந்த பணிக்காக நவீன செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு போல சரிபார்ப்பு பணிக்கு வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட திருத்தங்களை செய்ய காதிக படிவங்களில் பூர்த்தி செய்து தரத் தேவையில்லை.காகிதமில்லா முறையில் இந்த நவீன ஆன்ட்ராய்டு செல்போன் செயலி மூலம், திருத்தத்திற்கான உரிய ஆவணங்களை வீடு தேடி வரும் அலுவலர்களிடம் காண்பித்து உடனுக்குடன் திருத்திக் கொள்ளும் வசதி உள்ளது.

இதற்கான நவீன ஆண்ட்ராய்டு செயலி பற்றிய பயிற்சி இப்பணியை மேற்கொள்ளும் அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் உள்ள 250 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 14ம் தேதி அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா தலைமையில் நடைபெற்றது.தாசில்தார் செந்தில் மற்றும் தேர்தல் தாசில்தார் மகேந்திரன் ஆகியோர் பயிற்சியளித்து பேசினர். தற்போது இந்த வாக்காளர் சரி பார்ப்பு பணி அரவக்குறிச்சி பகுதி உள்ளிட்ட தொகுதி முழுவதும் வீடு வீடாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வாக்காளர் சரி பார்ப்பு பணியின் போது வாக்காளர்கள் பெயர், முகவரி, போட்டோ உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இருப்பின் வீடு தேடி வரும் அலுவலர்களிடம் தெரிவித்து திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அரவக்குறிச்சி தாசில்தார் செந்தில் தெரிவித்தார்.
Tags : area ,Aravakurichi ,
× RELATED குடியிருப்பு பகுதியை ஒட்டி வளர்ந்த சீத்தை முட்கள் அகற்றப்படுமா?