×

கொலை வழக்கில் இருந்து கே.பி.பி.சாமி எம்எல்ஏ சகோதரர்கள் விடுதலை: நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கடந்த திமுக ஆட்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்பட்டு, மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றியவர் கே.பி.பி.சாமி. தற்போது திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக உள்ளார். இவரது சொந்த ஊரான கேவிகே குப்பத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவர் கடந்த 2005ம் ஆண்டு  மாயமானார். இந்நிலையில்  கடந்த 2011ம் ஆண்டு  அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, செல்லதுரை காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. கே.பி.பி.சாமி அவரது சகோதரர்கள் கே.பி.சங்கர்,  சொக்கலிங்கம் உட்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் 6 மாதத்திற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு பொன்னேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிந்து பொன்னேரி 4வது கூடுதல் மாவட்ட  நீதிபதி  இருசன் பூங்குழலி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், கே.பி.பி.சாமியும், அவரது சகோதரர் கே.பி.சங்கர் மற்றும் 6 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.

Tags : brothers ,KPP Sami MLA ,Court ,
× RELATED விளம்பரங்களுக்கு அனுமதி தருவதில்...