×

கரூர் நகராட்சி பகுதியில் விளை நிலங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளால் பாதிப்பு

கரூர், செப். 20: கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், நகராட்சியை ஒட்டியுள்ள சில பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் விளைநிலங்களில் செயல்பட்டு வருகிறது.பார்கள் இன்றி செயல்பட்டு வரும் கடைகளுக்கு செல்லும் குடிமகன்கள், சரக்கு வாங்கி, அங்கேயே நின்று குடித்து விட்டு, பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை அப்படியே போட்டு விட்டு வந்து விடுகின்றனர். தொடர் மழை காரணமாக, பிளாஸ்டிக் பொருட்கள் நிலங்களில் மக்கி பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அருகில் உள்ள வாய்க்கால்களில் சென்று, நீரோட்ட போக்கையும் மாற்றி வருகிறது. எனவே, கரூர் நகராட்சியை ஒட்டி விளைநிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.எனவே, துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு, இதனால் ஏற்படும் விளைவுகளை குறைக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிக்கு இடம் மாற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Task Shop ,Karur Municipality ,
× RELATED வண்டலூர் உட்கோட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு