×

தோகைமலையில் பரிதாபம் பாலத்தில் இருந்து மயங்கி விழுந்து தொழிலாளி பலி

தோகைமலை, செப். 20: தோகைமலையில் உள்ள செட்டித்தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன்(49). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் தோகைமலை ஒன்றிய அலுவலகத்திற்கு சிமெண்ட் மூட்டைகள் தூக்கும் வேலைக்கு சென்றார்.அப்போது தோகைமலை ஒன்றிய அலுவலகம் அருகே குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் உள்ள பாலக்கட்டையில் அமர்ந்து உள்ளார். இந்நிலையில் கண்ணதாசன் திடீரென மயங்கி பாலத்தின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் விழுந்து உள்ளார்.
இதில் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணதாசன் இறந்தார். இது குறித்து தோகைமலை போலீசார் விசாரைண செய்து வருகின்றனர்.

Tags : bridge ,
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்