×

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தொழிலதிபர்

காஞ்சிபுரம், செப்.20: காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சியை சேர்ந்த தொழிலதிபர் வி.ஏ.தாமோதிரன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சியை சேர்ந்த தொழிலதிபர் வி.ஏ.தாமோதரன். இவரது மனைவி அம்சா தாமோதரன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் திமுகவில் இணைந்தனர். அப்போது, திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர், செய்யூர் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், ஒன்றிய நிர்வாகிகள் தமீன், கயல் மாரிமுத்து, சி.எஸ்.பாபு, கோபால், சம்சுகனி, ஜெயச்சந்திரன், விஜயமோகன், சாமிவேல், ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனா்.

Tags : Businessman ,DMK ,MK Stalin ,
× RELATED சிவகங்கை மாவட்டம் கீழடியில்...