×

மதுரமங்கலம் ஊராட்சியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீபெரும்புதூர், செப்.20: மத்திய அரசின் மணிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் பள்ளிகளில் தூய்மை நிகழ்வுகள் திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மதுரமங்கலம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தூய்மை இந்தியா நிகழ்வுகள் திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் வட்டார  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட  அலுவலர் கோமதி தலைமை வகித்தார். அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர், மாணவர்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தினமும் குளிக்க வேண்டும். சுத்தமான உடைகளை அணிய வேண்டும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தும்மல் இருமல் வரும்போது கைக்குட்டை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை, ஒவிய போட்டிகள் நடந்தன. பெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். மேற்பார்வையாளர் ஏஞ்சல் மேரி, தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Health awareness camp ,Maduramangalam ,
× RELATED தையூர், காயார் ஊராட்சியில் கொரோனா நிவாரண உதவி: தா.மோ. அன்பரசன் வழங்கினார்