×

திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம்

உத்திரமேரூர், செப். 20: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். எம்எல்ஏ புகழேந்தி, ஒன்றிய நகர செயலாளர்கள் குமார், ஞானசேகரன், சேகர், குமணன், கண்ணன், தர், தம்பு, பாரிவள்ளல், இனியரசு, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் இந்தி மட்டுமே இந்தியாவில் அடையாளம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதை கண்டித்தும், அதனை திரும்பப் பெற கோரியும் மாபெரும் கண்டன அர்ப்பாட்டம் 20ம் தேதி (இன்று) காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் நடைபெற உள்ளது.

இந்த ஆர்பாட்டத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது. இளைஞரணி தலைவர் அறிவிப்புக்கு இணங்க பெருமளவு இளைஞர்களை கட்சியில் இணைப்பது. மாற்று கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரை கட்சியில் இணைத்து கட்சியினை மேலும் பலப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட அமைப்பாளர்கள் அப்துல்மாலிக், வேதாசலம், சோழனூர் ஏழுமலை, பெ.மணி, முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,South ,District Executive Meeting ,
× RELATED கன்னியாகுமரியில், சாலைப்பணி தாமதம்:...