×

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து தென்காசியில் காங். ஆர்ப்பாட்டம்

தென்காசி, செப். 20: தென்காசியில் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தியை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும் அவரது உருவப்படத்தை கிழித்தும்  தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட  காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முரளிராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், கோமதிநாயகம், சண்முகவேல், முகம்மது உசேன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சீவநல்லூர் சட்டநாதன், ஜேம்ஸ், நாகராஜன், பொதுச் செயலாளர்கள் முருகேசன், கணேசன், மாவட்டச் செயலாளர்கள் கதிரவன், திவான், அமைப்புச் செயலாளர்கள் தேவேந்திரகுமார், அகிலாண்டம், லட்சுமணன், கராத்தே செல்வன், குற்றாலம் வெங்கடாச்சல பெருமாள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Tags : Tenkasi ,Rajendrapalaji Demonstration ,
× RELATED காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்