சாலையோர பிரதிநிதிகள் தேர்தல்

திருக்கோவிலூர், செப். 10: திருக்கோவிலூர் நகர சாலையோர பிரதிநிதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது.  பேரூராட்சிக்குட்பட பகுதியில் சாலையோர வியாபாரிகள் 203 பேர்  உள்ளனர். பிரதிநிதிகளுக்கான தேர்தலையொட்டி கடந்த 28ம் தேதி மனுதாக்கல் தொடங்கி இந்த மாதம் 5ம் தேதி வரை நடந்தது. இதில் மொத்தம் 12 மனுக்கள் பெறப்பட்டு அதில் 1  மனு ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 11 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமன், தலைமை எழுத்தர்  எழிலரசன் ஆகியோர் தலைமையில் நேற்று தேர்தல் நடந்தது.

Tags : Election ,roadside representatives ,
× RELATED தேர்தலுக்கு ஓட்டிய வாகனங்களுக்கு வாடகை வரவில்லை