×

தூத்துக்குடியில் சண்முகையா எம்எல்ஏ குறை கேட்பு

தூத்துக்குடி, செப்.20: தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியில் சண்முகையா எம்எல்ஏ மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சண்முகையா தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டுக்குட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி, எம்ஏசி கார்டன், பிள்ளையார்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பைக்கில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவருடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் ஜோதிராஜா, இந்திராநகர் பகுதி செயலாளர் சிவக்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வெயில்ராஜ், சிலுவைப்பட்டி கிளை செயலாளர் கோயில்மணி, வட்ட செயலாளர்கள் மணிவண்ணன், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Shanmugai MLA ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி-பெங்களூரு இடையே நாளை மறுநாள் முதல் மீண்டும் விமான சேவை