×

தூத்துக்குடியில் இலவச பொது மருத்துவ முகாம்

தூத்துக்குடி, செப்.20:தூத்துக்குடி மிட் டவுன் அரிமா சங்கம், புதியம்புத்தூர் ரெடிமேட் பியர்ல் சிட்டி அரிமா சங்கம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம், ஆசிரியர் தினவிழா புதியம்புத்தூர் எச்.என்.யூ.பி.நர்சரி பிரைமரி பள்ளியில் நடந்தது. முன்னாள் மாவட்ட ஆளுநர் ராமசாமி தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். தூத்துக்குடி மிட் டவுன் அரிமா சங்க தலைவர் வக்கீல் ஸ்டான்லி வேதமாணிக்கம் வரவேற்றார்.அரிமா சங்க நிர்வாகி புலவர்கணேசன், வட்டார தலைவர் செம்புலிங்கம், மருத்துவர்கள் சுகுமார், சரவணன், டேவிஸ் பிரபாகர், ஷிப்ரா, ரவிசங்கர், ‘அன்பு மனிதம்’ ஷேக் முகம்மது, புதியம்புத்தூர் ரெடிமேட் பியர்ல் அரிமா சங்க தலைவர் மகாராஜன், பொருளாளர் முத்தமிழ்செல்வன், தூத்துக்குடி அரிமா சங்க ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பள்ளி தலைமையாசிரியை உமா, ஆசிரியர் தின வாழ்த்துரை வழங்கினார்.முகாமில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக கண், பல், சர்க்கரைநோய், இருதயநோய், ரத்தசோகை போன்ற மருத்துவ பரிசோதனைகளை செய்து ஆலோசனை வழங்கினர். ரத்ததான முகாமும் நடந்தது. இதில், அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை அரிமா சங்க தலைவர்கள் வக்கீல் ஸ்டான்லி வேதமாணிக்கம், மகாராஜன், செயலாளர்கள் சண்முகபாண்டியன், முத்தமிழ்செல்வன், பொருளாளர்கள் முருகன், அருண்காமராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Free General Medical Camp ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றவர் தப்பி ஓட முயற்சி