×

விழுப்புரம் அரசு கல்லூரிக்கு விடுமுறை

விழுப்புரம்,  செப். 20: தேர்வுக்கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசுக்கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வேலூர்  மாவட்டத்திலுள்ள திருவள்ளூர் பல்லைக்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு  மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம்  திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு  பாடத்திற்கு ரூ.68 லிருந்து ரூ.100 ஆகவும், முதுகலைபட்டப்படிப்பில் ஒரு  பாடத்திற்கு ரூ.113லிருந்து, ரூ.160 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அரசுக்கல்லூரி மாணவ, மாணவிகள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இக்கல்லூரிகளில் பெரும்பாலும் கிராமப்புற ஏழை, மாணவ, மாணவிகளே  படித்துவருகின்றனர்.

இந்நிலையில் தேர்வுக்கட்டணம் உயர்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் விழுப்புரம்  கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த  இருநாட்களாக தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபடமுயன்ற  அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இந்நிலையில் நேற்று மூன்றாம் நாளாக திண்டிவனம் அரசு கல்லூரி  மாணவ, மாணவிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனிடையே விழுப்புரம் அறிஞர்  அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் தொடர்போராட்டம் காரணமாக நேற்று  கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Tags : Vacation ,Government College ,Villupuram ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்