சிபிஎஸ்இ தென்மண்டல டென்னிஸ் போட்டிகள் நாகர்கோவிலில் நடந்தது

நாகர்கோவிலில், செப்.20: சிபிஎஸ்இ தென் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டிகள் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. பயோனியர் பள்ளியில் இதற்கான தொடக்கவிழா காலையில் நடைபெற்றது. பின்னர் ஒழுகினசேரியில் உள்ள நாகர்கோவில் கிளப்பில் மாணவ மாணவியரின் அணிவகுப்பு, போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், அந்தமான் நிகோபார் பகுதிகள் என 160 சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து, மொத்தம் 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சிபிஎஸ்இ மண்டல அலுவலர் னிவாசன் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், விளையாட்டு இயக்குநர் சிவகுமார், சிபிஎஸ்இ அப்சர்வர் பழனி, கணேசன் மற்றும் நாகம்மாள் மில் சிஎம்டி குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : CBSE Southwest Tennis Tournament ,Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் தச்சுத்தொழிலாளி...