×

மனஅழுத்தம் தீர துப்புரவு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி

நாகர்கோவில், செப்.20: நாகர்கோவில் மாநகராட்சியில் மனஅழுத்தம் தீர துப்புரவு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நாகர்கோவில்     மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் மாநகராட்சி மற்றும் 3 நகராட்சிகளின்     பணியாளர்களுக்கு 4 கட்டமாக துப்புரவு பணி மேற்கொள்ளுதல், தன்னலம்   பேணுதல்,   திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க   அவர்களுக்கு  யோகா பயிற்சி  அளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்   பகவதிபெருமாள்,  மாதவன்பிள்ளை மற்றும்  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : cleaning staff ,
× RELATED தாயை அடக்கம் செய்த அரை மணி நேரத்தில்...