ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து நிலங்களை மீட்டுதரக் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு

திருவாரூர், செப். 20: திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து விவசாய நிலங்களை மீட்டுத் தரக்கோரி விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட புழுதி குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து கடந்த 2013ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து மீண்டும் தங்களுக்கு பெற்று தருமாறு மேற்படி கிராமத்தைச் சேர்ந்த ராஜபாலன், முருகானந்தம், பிச்சைகண்ணு, ஜெயச்சந்திரன், குணசேகரன், ஐயப்பன்உட்பட பல்வேறு விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags : collector ,lands ,ONGC ,
× RELATED தட்கல் முறையில் மின் இணைப்பு: விவசாயிகள் கலெக்டரிடம் மனு