×

அமைச்சர் காமராஜ் பேச்சு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் கண்டித்து ஆளுநர் மாளிகையை 28ல் முற்றுகை கூத்தாநல்லூரில் இருந்து 100 பேர் பங்கேற்பு இளைஞர் பெருமன்ற கூட்டத்தில் முடிவு

மன்னார்குடி, செப். 20: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதை கண்டித்து செப்டம்பர் 28 ல் சென்னை ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் அறிவித்துள்ளது.அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் நகரக்குழு கூட்டம் கூத்தாநல் லூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் விக்னேஷ் தலைமை வகித்தார். நகர செயலாளர் பிச்சமுத்து முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் சுதர்சன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதை கண்டித்து செப்டம்பர் 28 ல் சென்னை ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு நடை பெறவுள்ள போராட்டத்தில் கூத்தாநல்லூர் நகர குழு சார்பில் 100 பேர்பங்கேற்பது, கூத்தாநல்லூர் அரசு வட்ட மருத்துவமனை 24 மணி நேரமும் முழு நேர பணி மருத்துவர்களை கொண்டு இயக்கிட வேண்டும், எக்ஸ்ரே, இஜிசி, ரத்தப் பரிசோதனை ஆகியவற்றை முழுநேரமும் இயக்கிட வேண்டும், கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளிக்கு நிகராக மாணவிகளிடம் கட்டணம் வாங்கும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.முன்னதாக பாநெப்போலியன் வரவேற்றார். முடிவில் பகத்சிங் நன்றி கூறி னார்.


Tags : Kamaraj ,speech ,palace ,governor ,removal ,meeting ,Koothanallur ,Kashmir ,
× RELATED ஒட்டன்சத்தித்தில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு