×

தமிழகத்தில் அண்ணாவின் இருமொழி கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்

திருவாரூர், செப். 20: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் திருவாரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மூர்த்தி தலைமையிலும், ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பேசியதாவது, தற்போது இந்தி மொழி பிரச்சினையிலும் தமிழக அரசை குற்றம்சாட்டி வருகின்றனர். அண்ணாவின் பெயரைக் கொண்டும் கட்சிக் கொடியில் அவரது உருவத்தை கொண்டும் செயல்பட்டு வரும் இயக்கமாக அதிமுக இருந்து வருகிறது. அதன்படி அவரின் இரு மொழி கொள்கையினை அதிமுகவும், தற்போதைய தமிழக அரசும் தொடர்ந்து கடைபிடிக்கும். இதில் எவ்வித மாற்றமும் இருக்காது. இவ்வாறு அமைச்சர் காமராஜ் பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மீனவர் அணி செயலாளர் முனுசாமி, அமைப்பு செயலாளர் கோபால், பேரவை மாவட்ட செயலாளர் வாசுகிராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Anna ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம்...