×

புதுகையில் இளம்பெண், மாணவி மாயம்

கந்தர்வகோட்டை, செப்.20: ஆதனக்கோட்டை அடுத்த பெருங்களூரை சேர்ந்தவர் குமரேசன் (31). இவரது மனைவி ராதா(24). இவர்களுக்கு 2 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. ராதா திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.காம். படித்திருந்தார். அதற்கான சான்றிதழை வாங்கி வருகிறேன் என கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் ராதாவைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் குமரேசன் ஆதனக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெ–்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை யாரும் கடத்திச் சென்றார்களா? என விசாரிக்கிறார்.உடையாளிப்பட்டி போலீஸ் சரகம், வடக்கிப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் அண்டகுளத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 17ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் உடையாளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Pussy teenager ,
× RELATED கல்லூரி மாணவி மாயம் போலீசில் தாய் புகார்