×

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்

புதுச்சேரி, செப். 20: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுலை விமர்சித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு புதுச்சேரி காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்ட அறிக்கை:- இந்திய தேசத்தில் தான் தான் அதி மேதாவியாகவும், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று தலைக்கணத்தோடு தான்தோன்றித்தனமாக சமீபத்தில் உளறி வருபவர் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். சோனியாகாந்தியை பெண்ணென்றும் பாராமல் ஒருமையில் விமர்சித்தது மிகவும் கண்டனத்துக்குரியது. மேலும் ராகுல்காந்தி காந்தி மற்றும் காங்கிரஸ் பேரியகத்தைப் பற்றியும் அரசியல் நாகரீம் மறந்து பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை கோட்பாடுகளை மறந்து தன் பதவியை காப்பாற்றிக் ெகாள்வதற்காக மோடியின் காலில் விழுந்து திரிந்து கொண்டிருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கு அரசியல் நாகரீகத்தையும், நாவடக்கத்தையும் அதிமுக முன்னணி தலைவர்களும், தமிழக முதல்வரும் கற்றுத்தர முன்வர வேண்டும். சோனியாவையும், ராகுலையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த அவர், நாட்டு மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.மாண்புகளை மறந்து நாகரீகமற்ற பேசிக் கொண்டு திரியும் ராஜேந்திர பாலாஜி போன்றவர்களை நாட்டு மக்கள் வருங்காலத்தில் புறந்தள்ள வேண்டும். இதே அருவருக்கத்தக்க பாணியில் தாங்கள் விமர்சித்துக் கொண்டிருந்தால் அரசியல் ரீதியான விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கடுமையாக எச்சரிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Rajendra Balaji ,Congress ,
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...