×

விராலிமலை முருகன் கோயிலில் பக்தர்களுக்கு தெரியாமல் உண்டியல் பணத்தை எடுத்து சென்றதால் அதிருப்தி

விராலிமலை, செப் 20: விராலிமலை முருகன் கோயில் தீ பற்றி எறிந்த உண்டியலில் இருந்த பணத்தை நேற்று முன்தினம் இரவு கோயில் அதிகாரிகள் பக்தர்களுக்கு தெரியாமல் கொண்டு சென்றது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விராலிமலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயில் விஷேச காலங்களில் ஆயிரக்கணக்கானோரும், தினமும் திரளான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் மலைமேல் கோயில் சந்நதியிலும், மலையடி வாரத்தில் விநாயகர் கோயில் அருகேயும், ஆதி முருகன் சந்நதி அருகேயும் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை கோயில் அதிகாரிகள் பக்தர்கள் முன்னிலையில் திறந்து காணிக்கை எண்ணுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோயில் அடிவாரத்தில் விநாயகர் சந்நதி அருகே உள்ள உண்டியலில் புகை கிளம்பியுள்ளது. இதை பார்த்து அதிச்சி அடைந்த பக்தர்கள் உண்டியலில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுகுறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடைபெற்று சில தினங்கள் ஆவதாலும், இரவு நேரத்தில் பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் கோயில் அதிகாரிகள் உண்டியலை திறந்து பணத்தை எடுத்து சென்ற சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Devotees ,Viralimalai Murugan Temple ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...