×

போஷன் அபியான் திட்டத்தை அரசு துறைகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்

காரைக்கால், செப்.20: மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தை அரசுத்துறைகள் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்று, காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவுறுத்தியுள்ளார். காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவகலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில், துணை ஆட்சியர் பாஸ்கரன், நகராட்சி ஆணையர் சுபாஷ், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ், முதன்மைக்கல்வி அதிகாரி அல்லி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி சத்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி சத்யா பேசும்போது, பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும், 6 வயது வரை குழந்தைக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும், கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும், பள்ளி செல்லும் சிறார்கள் சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் உள்ளிட்டவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். என்றார்.தொடர்ந்து, ஒரு மாதம் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள், நலவழித்துறை, வட்டார வளர்ச்சித்துறை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்தவேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் விக்ராந்த்ராஜா ஆலோசனை வழங்கினார். முடிவில், சத்தான உணவை எடுத்துக் கொள்வது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags : Government departments ,Poshan Abhiyan ,
× RELATED அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி...