×

கோ ஆப்டெக்ஸ் மூலம் தீபாவளி விற்பனை கடலூர் மண்டலத்தில் ரூ.15 கோடிக்கு இலக்கு

நாகை, செப்.20: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸ் மூலம் கடலூர் மண்டலத்தில் ரூ.15 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்புடன் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், சேலம் பட்டுச் சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மீரட் போர்வைகள், சுடிதார் ரகங்கள், சிறுமுகை, அருப்புக்கோட்டை, பரமக்குடி, உறையூர், சேலம் பருத்தி சேலைகள், ஜமுக்காலம், போர்வைகள், தலையணை உறைகள் விற்பனைக்கு வந்துள்ளது. 30 சதவீத சிறப்பு தள்ளுபடியில் அனைத்து கைத்தறி ஆடைகளும் விற்பனை செய்யப்படும். தீபாவளி விற்பனை இலக்காக கடலூர் மண்டலத்திற்கு கடந்த ஆண்டு ரூ.12 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.15 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார். கலெக்டர் சுரேஷ்குமார், கடலூர் மண்டல மேலாளர் குணசேகரன், மேலாளர் (தணிக்கை) சரவணன், துணை மண்டல மேலாளர் ஸ்டாலின், ரக மேலாளர் சுகுமார், நாகை விற்பனை நிலைய பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags : region ,Go Apex ,Cuddalore ,
× RELATED சமையல் காஸ் விற்பனை அதிகரிப்பு:...