×

படுகாயம் அடைந்தவர்கள் சாலைமறியல் போராட்டம் அரசு அனுமதி பெற்று பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும்

மயிலாடுதுறை,செப்.20: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிளக்ஸ் பிரிண்ட்டிங்ஸ் மற்றும் விளம்பரதாரர்கள் இணைந்த கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு சங்க தலைவர் சையதுஉமர் தலைமை வகித்தார். செயலாளர் சரவணன், துணைத் தலைவர் செல்வசுமன், துணை செயலாளர் தினேஷ்குமார், கார்த்திக் அண்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அரசிடம் அனுமதி பெற்றே விளம்பர பேனர்கள் வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இத்தொழிலை சார்ந்த குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்டாத கையில் அரசாங்கமும், நீதிமன்றமும் அவர்களுக்கு வாழ்வுரிமை வழங்கும்படி கோரிக்கை வைக்கப்படுகிறது. இதை வலியுறுத்தி காவல்துறை அனுமதி பெற்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : roadside protest ,
× RELATED பட்டாசு வெடிக்க தடை நீட்டிப்பு