×

கொள்ளிடம் அருகே அரை குறையாக விட்டுச்சென்ற சாலை பணியால் மக்கள் அவதி

கொள்ளிடம், செப்.20: கொள்ளிடம் அரை குறையாக விடப்பட்ட சாலைப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்திலிருந்து செருகுடி வரை ஒரு கிலோ மிட்டர் தூரத்துக்கு, பிரதம மந்திரியின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலை மேம்படுத்தும் பணி துவங்கி நடைபெற்றது. ஆனால், சாலை போடும் பணி முழுவதும் நிறைவடையாமல் துவக்க நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகள் பள்ளமாக இருப்பதால், சில தினங்களாக பெய்து வரும் மழை சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. சாலை மேம்படுத்தும் பணி துவக்க நிலையிலேயே முழுமை பெறாமல் அரை குறையாக நிறுத்தப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களும், பள்ளி மாணவர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பெண்களும் சிரமம் அடைகின்றனர். பணி துவங்கி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் மேற்கொண்டு சாலை பணியை துவக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலைப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை முழுமையும் சாலை மேம்படுத்தாமலேயே எடுக்கப்பட்டு விட்டதோ என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செருகுடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hut ,
× RELATED இருளர் குழந்தைகளுக்காக ஒற்றை குடிசைக்குள் இயங்கும் ‘அலை!’