×

நேரு வேளாண் கல்லூரி மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்து செயல் விளக்கம்

சீர்காழி, செப்.20: காரைக்கால் நேரு வேளாண் கல்லூரி மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில், காரைக்கால் நேரு வேளாண் கல்லூரி மாணவிகள் தங்கி பல்வேறு பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் ஜெயசவீதா, மோனிகா, அனிதா, அபிலாஷா, அனு, மௌனிகா, ஷாலினி மற்றும் அரிஷா உள்ளிட்ட மாணவிகள் கீழசட்டநாதபுரம் கிராமத்தில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ள ஏதுவாக பாய்நாற்றங்கால் முலம் விதை தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்தும், அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கி கூறினர். மேலும் விவசாயிகள் கேட்ட சந்தேகங்களுக்கும் பதில் அளித்தினர்.

Tags : Nehru College of Agriculture ,
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு