×

பயனாளிகள் பரிதவிப்பு பணி நெருக்கடி கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை, செப்.20: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் அரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தியாகராஜன், துணைத்தலைவர் ஜோதிமணி ஆகியோர் பேசினர்.ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அளித்து வரும் பணி நெருக்கடிகளை கண்டிப்பது. பிறத்துறை பணிகளை ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களை செய்ய சொல்லி வற்புறுத்துவது. மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள போதுமான நிதியினை ஒதுக்கீடு செய்வதோடு உரிய கால அவகாசமும் வழங்க வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் மாநில தணிக்கையாளர் ஜம்ருத்நிஷா நன்றி கூறினார்.

Tags : demonstrators ,Rural Development Department ,crisis ,
× RELATED செந்துறை ஒன்றிய பகுதியில் ரூ. 11.15 கோடி...