×

வேலி தகராறில் முதியவரை தாக்கியவர் கைது

வேதாரண்யம், செப்.20: வேதாரண்யம் தாலுகா துளசாபுரத்தை சேர்ந்தவர் அம்பிகாபதி (56). இவரது சகோதரர் சிவப்பிரகாசம(54). அண்ணன் தம்பி இருவரும் அடுத்தடுத்து வசித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே வேலி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் அம்பிகாபதி தனது இடத்தில் வேலி வைக்க முயன்றார். இதை பார்த்த சிவபிரகாசத்தின் மருமகன் வீரமணி (43) என்பவர் அம்பிகாபதியை தரக்குறைவாக பேசி வேலி வைப்பதை தடுத்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த அம்பிகாபதி வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.


Tags :
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது