கொரடாச்சேரியில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

திருவாரூர், செப். 19: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி போஸான் அபிநயா மற்றும் ஊட்டச்சத்து குறித்து பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது வெள்ள மதகு, ஆய்குடி மற்றும் என்கண் உட்பட பல்வேறு கிராமங்களில் நடைபெற்றது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன் ,வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பெண்களிடையே காணப்படும் ரத்தசோகை ,வளர்ச்சி குறைபாடு, எடை குறைபாடு போன்றவை குறித்தும் இந்த குறைபாடுகளை நீக்குவது குறித்தும், தினசரி உணவில் காய்கறி மற்றும் பழ வகைகள் சேர்த்துக் கொள்வது குறித்தும் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கிராமங்களை சேர்ந்த பெண்கள் மட்டுமின்றி கர்ப்பிணிப் பெண்கள் ,பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : National Nutrition Awareness Camp ,Koradacheri ,
× RELATED ரெட்டியார்சத்திரம் யூனியனில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்