×

பணிச்சுமையை குறைக்க கோரி ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், செப். 19: பணிச்சுமையை குறைக்கக்கோரி திருவாரூரில் நேற்று ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அளித்துவரும் பணி நெருக்கடிகளை கண்டித்தும் ,பணி சுமையை குறைக்க கோரியும் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தலைவர் வசந்தன், பொருளாளர் சுந்தரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rural Development Officers Association ,
× RELATED அங்கன்வாடியில் காலி பணியிடங்களால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பு