×

கீழவிடையல் ஊராட்சியில் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் வழங்கி செயல் விளக்கம்

வலங்கைமான், செப். 19: வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழவிடையல் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறையினர் தமிழக முதல்வரின் கிராமப்புற வீட்டு காய்கறி உற்பத்தி திட்டத்தின் கீழ் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி செயல் விளக்கம் செய்து காட்டினர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திட்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஒரு ஊராட்சிக்கு நூறு விவசாயிகள் வீதம் தமிழக முதல்வரின் கிராமப்புற வீட்டு காய்கறி உற்பத்தி திட்டத்தின் கீழ் கீரை, வெண்டை, கத்தரி, முருங்கை, தக்காளி, பரங்கி உள்ளிட்ட ஏழுவிதமான விதைகள் மற்றும் ஒரு கிலோ தொழுஉரம், காய்கறி வளர்ப்புமுறை குறித்த துண்டு பிரசுரம் ஆகியவை இலவசமாக வழங்கபட்டு வருகின்றது. இந்நிலையில் வலங்கைமான் ஒன்றியத்திற்குட்பட்ட கீழவிடையல் ஊராட்சியை சேர்ந்த 60 விவசாயிகளுக்கு இலவசமாக காய்கறி விதைகளை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் நிதிமாணிக்கம் வழங்கினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலைதுறை துணை அலுவலர் செல்வகுமார், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சிவமணி, தர்மலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முன்னதாக காய்கறி விதைகள் விதைப்பதற்கான இடைவெளி மற்றும் நாற்றுவிடுதல் உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் விவசாயிகளின் தோட்டத்தில் நேரடி செயல் விளக்கம் செய்து காட்டினர்.

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...