×

திருத்துறைப்பூண்டி குட்ஸ்செட் வாய்க்காலில் மதகு இல்லாததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து

திருத்துறைப்பூண்டி, செப்.19: திருத்துறைப்பூண்டி குட்ஸ்செட் வாய்க்காலில் மதகு இல்லாததால் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது. திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோடு இருந்து குட்ஸ் செட் தெருவுக்கு பிரியும் சாலை அருகில் மதகு உள்ளது இந்தமதகில் தடுப்பு பலகை கிடையாது மேலும் இந்தமதகில் வரும் குட்ஸ்செட் வாய்க்கால் இருந்து வரும் தண்ணீர் செங்கமல குளத்திற்கு வரும். பலஆண்டுகளாக ஆக்கிரமிப்பு பிடியில் வாய்க்கால் உள்ளதால் தண்ணீர் முழுவதும் திரும்பி அருகில் உள்ள விட்டுகட்டி வாய்க்காலுக்கு வருவதால் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது மேலும். சாகுபடி நிலத்தில் தண்ணீர் புகுந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.இது குறித்து விட்டுகட்டி விவசாயிகள்சங்கதலைவர் அழகன் கூறுகையில், குட்ஸ்செட் வாய்க்கால் மதகில் தடுப்பு பலகை கிடையாது.தடுப்பு பலகைஏற்படுத்த வேண்டும் மேலும் தண்ணீர் வரும் வாய்க்கால் முழுவதும் ஆக்கிமிரப்பு இருப்பதை அகற்ற வேண்டும்.ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் விட்டுகட்டி கிராமம் தப்பும் என்றார்.

Tags : town ,Tirupuruppundi ,
× RELATED நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர்...