×

முத்துப்பேட்டையில் அக்டோபர் முதல் அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வகுப்பு

முத்துப்பேட்டை,செப்.19: முத்துப்பேட்டை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அக்டோபர் மாதம் முதல் தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா தலைமையில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.இதில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளுக்கும் அக்டோபர் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம், மாதம் எட்டு நாட்கள் கராத்தே பயிற்சி அளிக்கப்படும்.அந்தந்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் இந்தப்பயிற்சிக்கு பொறுப்பாசிரியராக செயல்படுவர் என்று அறிவுறுத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இதில் ஒன்றியத்தில் உள்ள அணைத்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சக்தி விநாயகம் நன்றி கூறினார்.

Tags : Karate workshop ,government school students ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்