×

ராஜபாளையம் அருகே கண்மாய் குடிமராமத்து பணிகளை எம்எல்ஏ ஆய்வு

ராஜபாளையம், செப். 19: ராஜபாளையம் தொகுதி புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேதநாயகபுரம் ஆம்பல்குடி  கண்மாய் மற்றும் புத்தூர் ஊரணியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை  ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பார்வையிட்டார்.அப்போது ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, கண்மாய் தலைவர் கருத்தப்பாண்டியன் ஆகியோரிடம் கண்மாய் மற்றும் ஊரணிகளை பராமரிப்பு பணி சிறப்பான முறையில் நடைபெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஊருக்குள் மற்றும் சாலைகளிலும் பொழியும் மழைநீர் ஊரணிக்கு நான்கு பக்கங்களிலிருந்து தண்ணீர் வருவதற்கு புதிய கால்வாய் அமைத்தும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை வைத்தும் கால்வாய்களை பராமரிப்பு செய்து தண்ணீரை முறையாக சேமித்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து போர்வெல்களில் தண்ணீர் அதிகமாக இருக்கும். இதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் எடுத்துரைத்தார். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கால்வாய்களை பராமரிப்பு செய்வதாக உறுதி அளித்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் வடக்கு பருவமழை தொடங்கும் முன் மேற்கண்ட பணியை முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பொறியாளர் ஜெயனத், ஊராட்சி கிளர்க் நீராவி, ஊராட்சி செயலாளர் நல்லுச்சாமி, பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை செயலாளர் வேலு, விவசாயிகள் மாயகிருஷ்ணன், கருத்தப்பாண்டி, திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : MLA Study of Indiscriminate Migration Works ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!