×

திருவில்லிபுத்தூர் அருகே பொன் இருளப்பசாமி கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா

திருவில்லிபுத்தூர், செப். 19: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள ஸ்ரீபொன் இருளப்பசாமி கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி வைத்தியலிங்கபுரம், நூர்சாகிபுரம், இனாம் கரிசல்குளம் ஆகிய கிராமங்களில் இருந்து பால்குடம் எடுத்து பக்தர்களை ஸ்ரீபொன் இருளப்ப சுவாமி தர்மகர்த்தா மாரியப்ப நாடார், தலைவர் பத்மநாபன், ஸ்ரீபொன் இருளப்ப சுவாமி சிவனாயி அம்மன் திருக்கோயில் தலைவர் கடற்கரை ஆகியோர் தலைமையிலான விழா கமிட்டியினர் அனைவரும் வரவேற்றனர். தொடர்ந்து, மங்களவாத்தியம் ஒலிக்க, விக்னேஸ்வர பூஜை தொடர்ந்து, யாகசாலை பூஜை தொடர, கலசங்கள் புறப்பாடைத் தொடர்ந்து, அருள்மிகு பூர்ணா புஸ்காலம்பாள் சமேத வென்னிமலை அய்யனார், ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீராக்காச்சியம்மன் மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து. ஸ்ரீபொன் இருளப்பசாமி விமான மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், தீபாராதனையைத் தொடர்ந்து, மாபெரும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஸ்ரீபொன் இருளப்ப சுவாமி கோயில் நிர்வாக குழுவினர்கள் மற்றும் ஸ்ரீபொன் இருளப்ப சுவாமி - சிவனாயி அம்மன் திருக்கோவில் நிர்வாக குழுவினர்கள் மற்றும் பக்தர்களும் திரளாக பங்கேற்றனர்.
மழை பெய்ய வேண்டி


Tags : Maha Kumbabishekha Ceremony ,Aubon Irulappasamy Temple ,Thiruviliputhur ,
× RELATED திருவில்லிபுத்தூரில் சாலையில்...