×

வத்திராயிருப்பு பகுதி கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகளை கலெக்டர் ஆய்வு

வத்திராயிருப்பு, செப். 19: வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கண்மாய்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.வத்திராயிருப்பு பகுதியில் கொடிக்குளம் கண்மாய் 14 மில்லியன் கனஅடி கொள்ளளவு உள்ளது. 169 ஏக்கா் விவசாயம் பாசன வசதி கொண்டது. குடிமராமத்துப்பணிக்கு சுமார் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குணவந்தனோி கண்மாய் 35 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. 384 ஏக்கர் பாசன வசதி கொண்டது. ரூ.36 லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. பெத்தான்குளம் 2.5 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. 77 ஏக்கர் பாசன வசதி கொண்டது. ரூ.5. லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் குடிமராமத்துப்பணிகள் நடைபெற்று வருகிறது. புங்கன் குளத்தில் 5.3 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. 89 ஏக்கர் விவசாய பாசன வசதி கொண்டது. ரூ.8 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது.

மராமத்துப்பணியில் கண்மாய் கரைகளை பலப்படுத்துதல், வரத்துக் கால்வாய் தூர்வாருதல் கலுங்குகள், மதகு உள்ளிட்டவைகளை மராமத்து பணிகள் செய்வது உள்ளிட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த 4 கண்மாய்களில் நடைபெற்று வரும் குடிமராமத்துப்பணிகளை கலெக்டர் சிவஞானம் ஆய்வு செய்தார்.பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘குடிமராமத்துப்பணியில் விவசாயிகளை வைத்து வேலை நடைபெற்று வருகிறது. 75 சதவீதம் வரை வேலை நடைபெற்றுள்ளது. ஐம்பது சதவீதம் மட்டுமே பணிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பணிகள் நடைபெற்றதற்கு விரைந்து பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.கொடிக்குளம் கண்மாயில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற உள்ளது. இந்த மாதத்திற்குள் குடிமராமத்துப்பணிகள் அனைத்தும் முடிவடையும்’ என்றார். கலெக்டருடன் சிவகாசி ஆா்.டி.ஓ. தினகரன், பாதுப்பெணித்துறை செயற்பொறியாளர் ராஜா, வத்திராயிருப்பு தாசில்தார் ராஜா உசேன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் கலைச்செல்வி, உதவி பொறியாளா் காளிச்சரண், அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சேதுராமலிங்கம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...