×

மாலையில் படியுங்கள் பாலத்தில் குவிக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்கள் அகற்றம்

திருவில்லிபுத்தூர், செப். 19:  திருவில்லிபுத்தூர் மாதா கோயில் பாலத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக கட்டுமான பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதுதொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது.தினகரன் செய்தி எதிரொலியாக நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வாகனம் ஒன்றின் மூலம் மாதா கோயில் தெரு பாலத்தில் குவிக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருட்களை அப்புறப்படுத்தி அள்ளிச் சென்றனர். மாதா கோயில் பாலத்தின் வழியாக பல்வேறு பள்ளிகளுக்கு செல்லவும் பல்வேறு அரசு தங்களது அரசு அலுவலகத்திற்கு செல்லவும் இந்த பாலத்தின் சாலை வழியாக ராஜபாளையம் சாலை அடையவும் பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் வாகன ஓட்டிகளும் அதிகளவு பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் கட்டுமான பொருட்கள் அப்புறப்படுத்தியதால் பாலம் விசாலமாக காட்சியளிக்கிறது. போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் உள்ளது. சுமார் 5 டிராக்டர் அளவு கட்டுமான பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : bridge ,
× RELATED மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்