×

அதிமுக பொதுக்கூட்டம்

சிவகங்கை, செப். 19: சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். இதில் மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் அர்ச்சுணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் கோபி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : AIADMK ,General Meeting ,
× RELATED அதிமுக தொழில்நுட்ப பரிவு மண்டலச்...