×

திருப்புவனம் கோட்டையிலிருந்து புதூர் செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளது வாகன ஓட்டிகள் புகார்

திருப்புவனம், செப். 19: திருப்புவனம் கோட்டையிலிருந்து புதூர் செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்புவனம் கோட்டைப்பகுதியான தேரடியிலிருந்து புதூருக்குச் செல்லும் பிரதான சாலையாக மக்கள் பயன்படுத்துவது போலீஸ் லயன் வீதியாகும். மெயின் ரோட்டில் ஏதேனும் விபத்துக்கள் என்றாலும் இந்த வீதிதான் மாற்று வழியாக இருந்து வருகிறது. 500 மீட்டர் நீளமும 20 அடி அகலமும் உள்ள இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது. திருப்புவனம் பேரூராட்சி பகுதிக்குள் உள்ள 2,3,4,5,6,11,12, உடபட 7 வார்டுகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சாலையின் பல இடஙகளில் குண்டும் குழியுமாக பெயர்ந்து கிடக்கிறது. கடந்த சில நாட்களில் பெய்து வரும் மழையால் அந்தப் பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ரோட்டின் ஓரங்களில் வாடகை வாகனங்களையும். போலீசார் கைப்பற்றி வைத்துள்ள வாகனங்களையும் நிறுத்தி வைத்துள்ளதால் ஒரு பக்கம் ரோட்டின் பள்ளத்தில் மழைநீர் தேங்கிய பள்ளம் வேறு போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலர்கள் கூறுகையில், ‘போலீஸ் லயன் வீதி சாலை அமைக்க ரூ.36 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது’ என்றனர்.

Tags : Motorists ,road ,fort ,Thirupuvanam ,
× RELATED தங்கவயலில் ஒட்டு போட்ட சாலையை அடித்து சென்ற கனமழை: வாகன ஓட்டிகள் அவதி